முகத்தை அழகாக்க கூடிய உணவு வகைகள் 

  • தக்காளி 
  • பாதம் பருப்பு 
  • ஆளி விதை 
  • ஆரஞ்சு 
  • கருப்பு சாக்லேட்
  • தண்ணீர் பழச்சாறு 
  • தூக்கம் 
  • பயறு வகைகள் 
  • வெள்ளரி 

இந்த உணவு வகைகளை உட்கொண்டு வந்தால் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகள் வெளியேற்றி நல்ல கொழுப்புகளை அதிகரிக்கிறது இதனால் முகம் அழகாங்க உதவுகிறது.

தக்காளி 

 தக்காளி எளிதில் கிடைக்க கூடிய காய்களில் ஒன்றாகும்.
நம் அன்றாடவாழ்வில் பயன்படுத்தும் விலை மலிவான சத்துமிக்க உணவுகளில் முதன்மையானதாகும். தக்காளி பூக்கும் தாவர வகையாகும் 

பயன்கள்:

  • தக்காளியில் வைட்டமின் எ சத்துக்கள் அதிக அளவு இருப்பதால் நாம் தக்காளியை தினமும் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் நோய் எதிர் தன்மையை அதிகரிக்கிறது மற்றும் உடலில் ஈரத்தன்மையை அதிகரிக்கிறது. மற்றும்
  • வைட்டமின் எ உடலில் சேர்வதால் நமது முதுமை அடையும் தன்மையை குறைத்து இளமையை தக்கவைப்பதற்கு தக்காளி உதவுகிறது.
  • சிறுநீரக பிரச்சனை மற்றும் கல்லிரல் பிரச்னையை சரிசெய்கிறது
  • கண் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சாப்பிட்டால் தக்காளியில் உள்ள பீட்டா கரோட்டின் என்கிற சத்து கண்பார்வை சம்மந்தமான பிரச்னையை சரிசெய்கிறது.
  • தக்காளியை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள் ஆகியவையை சரிசெய்து முகத்தை பொழிவுபடுத்திக்கிறது. 

ஆளி விதைகள் 

ஆளி விதை எண்ணெயாகவும் மற்றும் உணவாகவும் பயன்படுகிறது.
ஆளிவிதை மஞ்சள் மற்றும் நீல நிறமாகவும் இருக்கும்.

நன்மைகள் 

  • உடலில் ஏற்படும் ஹோர்மோன் மாற்றத்தை சரிசெய்ய ஆளிவிதை மிகவும் உதவுகிறது. 
  • ஆளி விதையில் உள்ள பைட்டோ கெமிக்கல் நோய் எதிர்ப்பானாகவும் செயல்படுகிறது.
  • புற்றுநோய் பிரச்சனையை சரிசெய்கிறது ஆளிவிதை 
  • ஆளிவிதையில் ஓமெகா3 அதிகமாகவுள்ளதால் இதயத்திற்கு வெள்ளை அணுக்களை சீராக கொண்டுசெல்ல உதவுகிறது. இதனால் ஆளிவிதையை இதயத்தின் நண்பன் என்பார்கள்.  
  • முகம் மற்றும் சருமம் பொழிவு அடைய உதவுகிறது.

ஆரஞ்சு 

ஆரஞ்சு பழம் இது ஒரு பூக்கும் தாவரமாகும். இது வருடத்திற்கும் ஆயிரக்கணக்கான பழங்களை நமக்கு தருகிறது. இது சிட்ரஸ் குடும்பத்தை சார்ந்தது. இது மிகவும் சுவையாக இருக்கும். 

சத்துக்கள்

புரதம் ,மற்றும் நார்ச்சத்துக்கள், வைட்டமின்-சி ,வைட்டமின்-பி1,வைட்டமின்-எ மற்றும் வைட்டமின்-பி6

பயன்கள் 

  • ஆரஞ்சு பழத்தில் வைட்டமின்-பி6 உள்ளதால் நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.
  • இரத்தத்தில் உள்ள தேவையற்ற சர்க்கரையின் அளவுகளை குறைக்க உதவுகிறது. 
  • உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்குகிறது.
  • ஆரஞ்சு சாப்பிட்டால் முகம் பொலிவு அடையும்.மற்றும் சருமம் பொலிவு அடையும்.