உடல் எடையை அதிகரிக்கும் சிறந்த உணவுகள்  (Top Foods to Gain Weight)

நமது உடல் எடையை கூட்டுவதற்கு ஏற்ற இயற்கையான மற்றும் மலிவான சிறந்த சில உணவுகள். அதில் உள்ள சத்து வகைகளை அட்டவணையாக கொடுக்கப்பட்டுள்ளது.


நிலக்கடலை(Groundnut)

    நிலக்கடலை எளிதில் வாங்கக்கூடிய சிறந்த புரதமிக்க உணவாகும். இதற்க்கு “வேர்க்கடலை“,”கச்சான்“,”கலக்கா” என்ற மற்றொரு  பெயரும் உண்டு 

இது காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்த உணவாகும். 
இது அதிகமாக இந்தியாவில் விளைய கூடியது. இதில் அதிகமாக புரதசத்து கொட்டிக்கிடக்கிறது.

 பயன்கள்

  •  நிலக்கடலை சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கிறது.
  • அல்சைமைர்ஸ் என்ற நரம்பியல் நோய் உடலில் வராமல் பாதுகாக்கிறது.
  • பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கிறது.
  • இது உடலில் உள்ள தீய (கெட்ட)கொழுப்புகளை நீக்கி நல்ல கொழுப்புகளை உருவாக்குகிறது.
  •  நிலக்கடலையில் உள்ள சத்துக்கள் உடல் எடையை அதிகரிக்க மிகவும் உதவுகிறது.

பால் 

                                       

பால் இது ஒரு புரதமிக்க உணவாகும்.


இதில் இயற்கையான புரதச்சத்துக்கள் கொட்டிக்கிடக்கிறது.

பால் மூலமாக பலவகையான உணவுப்பொருள்கள் மற்றும் அழகு உபோயக பொருள்கள். தயாரிக்கப்படுகிறது.
சத்துக்களில்  மிகவும் சிறந்தவையான கால்சியம் அளவு  மிகவும் அதிகமாக   உள்ளது.மற்றும் பொட்டசியம் , லாக்டிக் (புரதம்) ஆகியவை அடங்கியுள்ளது.

பயன்கள் 

  • தினமும் பால் அருந்துவதால் அதில் உள்ள கால்சியம் உடலில் உள்ள எலும்புகளை வலுதாங்க மிகவும் உதவுகிறது.
  • உடல் எடையை குறைக்க மிகவும் பயன்படுகிறது.
  • பால் இதயம் சம்மத்தமான நோய்யை தடுக்கிறது.
  • பாலில் இருந்து தயாரிக்கபடும் அழகு சம்மத்தமான பொருள்களை தினமும் பயன்படுத்துவதால் உடல் சருமன் மென்மையாகிறது.
  • தூக்கமின்மையில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கிறது.

முட்டை 

                                     

வைட்டமின் மாத்திரை என்று அழைக்கப்படும் அதற்க்கு காரணம் அதிக       அளவு புரதம் மற்றும் கொழுப்பு சத்துக்கள் உள்ளதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது.
 தினமும் நாம் முட்டை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது ஏனென்றால் அதில் சத்துவகைகள் அதிகமாகவுள்ளது.  
இதனால் முட்டையின் மூலமாக நம் உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள்
 உள்ளதால் குழந்தைகள் முட்டை எடுத்துக்கொள்வதால் அவர்களின் வளர்ச்சி விகிதம் அதிகமாக மாற்றம் அடையும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். 
அதுமட்டும்மில்லாமல் உடல் எடையை கூட்டுவதில் முட்டைக்கு முக்கிய பங்கு உள்ளது. 

பயன்கள் 

  • உடல் வளர்ச்சியில் முட்டைக்கு ஒரு முக்கியபங்கு உள்ளது.
  • வைட்டமின் K &b6 என்ற சத்துக்கள் உள்ளதால் அது புற்றுநோயை வராமல் தடுக்கிறது.
  • மூளைசெல்கள் அதிகமாக உற்பத்தியாக முட்டை மிகவும் உதவுகிறது.
  • எலும்பு மற்றும் முடி ,பல்  வளர்ச்சியடையவும் வலுவாக்க மிகவும் உதவுகிறது.

வாழைப்பழம் 

                                  
எல்லா காலங்ளிலும் எல்லா நாடுகளிலும் விளையக்கூடிய பழங்களில் ஒன்றான வாழைப்பழம் இது முக்கனிகளில் ஒன்றாகும். 
இது மலிவான பழங்களில் ஒன்றாகும் இதனை தினமும் சாப்பிட்டுவத்தால் மருத்துவரை அணுகவேண்டாம். 
இதில் எண்ணற்ற சத்துக்கள் அடக்கியுள்ளது அதனை காணலாம்.

வகைகள் 

  • ரஸ்தாளி 
  • பச்சைநாடா(ன்)
  • பூவன்பழம்
  •  கற்பூரவள்ளி 
  • நேந்திரம்பழம்
  • கருவாழை 
  • செவ்வாழை   

பயன்கள் 

  • தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் சம்மத்தமான பிரச்சனைகளை குணப்படுத்தும் வல்லமை வாழைப்பழத்திற்கு உண்டு அதனால் தான் பழங்காலங்களில் இருந்து இன்று வரை மலச்சிக்கலை சரிசெய்யும் உணவுகளில் சிறந்தது என்று கூறுகிறார்கள். 
  • பொட்டாசியம் வாழைப்பழத்தில் அதிகமாக உள்ளதால் மூளையையும் 

இறைச்சி 

                                     

இறைச்சியில் அதிகமாக சாப்பிடுவதால் நமது உடலுக்கு அதிகப்படியான சத்துக்கள் கிடைக்கிறது.  

பெருபாலான உடற்பயிற்சி நிபுணர்கள் உடல் எடையை அதிகரிக்க இறைச்சி எடுத்துக்கொள்ளவேண்டும் என்கிறார்கள் . 

இறைச்சியில் பலவகைகள் உள்ளது இதில் சுவைதான் வேறுபடும் ஆனால் இதில் உள்ள சத்துக்கள் பொதுவாகும். 

இறைச்சியில் சில வகைகளை பற்றி கட்டுரைகளாக குறிப்பிட்டுள்ளோம்.

மீன் 

                                               

இறைச்சியில் பலவகைகள் உள்ளது அதில் முதன்மையானது மீன் ஆகும். இதில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக  இருக்கிறது .  மற்றும் விரைவில் செரிமானம் ஆகக்கூடியது.

 அதனால் தான் மீனை இறைச்சி வகைகளின் அரசன் என்கிறார்கள் .   

மீனில் வைட்டமின் டி ,கால்சியம் , அயோடின் , மெக்னீசியம் மற்றும் ஜிங்க் ,ஒமேகா 3 ,ஆகிய ஊட்டச்சத்துக்கள் அடக்கியுள்ளது . 

பயன்கள் 

  • ஆஸ்துமா நோயை வரவிடாமல் தடுக்க ஓமெகா3 மிகவும் உதவுகிறது . இது மீனில் அதிகமாகவுள்ளது. அதனால் தான் மருத்துவ ஆலோசகர்கள் மீனை அதிகமாக உட்கொள்ள பறித்துரைக்கிறார்கள்.
  • மீனில் கால்சியம் சத்துக்கள் உள்ளதால் இது மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. 
  • சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்க மிகவும் உதவுகிறது அதனால் தான் உடற்பயிற்சி வல்லுநர்கள் மீனை தினமும் ஒருவேளையாவது சாப்பிடவேண்டும் என்கிறார்கள் .

மீனாள் ஏற்படும் பக்கவிளைவுகள் 

மீனுடன் பால் சேர்ந்து சாப்பிடக்கூடாது ஏனென்றால் மீனும் பாலும் சேர்த்து சாப்பிட்டால் செரிமான கோளாறு ஏற்படும் .

பாதாம் பருப்பு 

                                         
பாதாம் பருப்பு இதில் அதிகஅளவு சத்துவகைகள் நிறைந்து உள்ளது மற்றும் வைட்டமின் மற்றும் தாதுக்கள் ஆகியவை பாதாம் பருப்பில் அதிகமாக இருப்பதால் இது உடல் எடையை அதிகரிக்கும் உணவுகளில் முதன்மையானது 

பயன்கள் 

  • பாதாம் பருப்பில் ஆன்டி ஆசிட் அதிகமாகவுள்ளதால் இது ரத்தத்தில் உள்ள வெள்ளை மற்றும் சிகப்பு அணுக்களை அதிகரிக்கும் தன்மை பாதாம் பருப்பில் அதிகமாகவுள்ளது.
  • இன்று பல ஆண்கள் ஆண்மைகுறைவால் அவதிப்படுகிறார்கள் இவர்கள் தினமும் பாதாம்பருப்பை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் தோல் நீக்கி சாப்பிட்டால் நரம்புகள் வலுவடையும் மற்றும் செல் உற்பத்தியை அதிகரித்து ஆண்மையை அதிகரிக்கிறது 
  • பாதாம் பருப்பில் புரத சத்துக்கள் எண்ணற்ற அளவு இருப்பதால் இவை உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.